Wednesday, May 14, 2008
போலி சாமியார்
கேரளா: போலி சாமியார் சைதன்யா கைது
கேரள போலீசாரால் தேடப்பட்டு வந்த போலி சாமியார் அமிர்தா சைதன்யா இன்று காலை எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எர்ணாகுளத்தில் சாமியார் அமிர்தா சைதன்யா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து, பதுங்கி இருந்த சைதன்யாவை கைது செய்தனர்.
தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யபட்டுள்ள அமிர்தா சைதன்யா துபாயில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர் என்பதும், சர்வதேச போலீஸாரால் (இன்டர்போல்) தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
எர்ணாகுளத்தில் 'சாந்தி தீரம்' என்ற பெயரில் ஆஸ்ரமம் நடத்தி வந்த அமிர்தா சைதன்யா எனப்படும் சந்தோஷ் மாதவன் மீது, ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
துபாயில் வசிக்கும் சாரா எட்வின் என்ற பெண் அளித்த புகாரின் பேரில் சைதன்யாவின் ஆசிரமத்தில் கேரள போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் புலித்தோல், வெளிநாட்டு மதுவகைகள், ஆபாச சிடி-க்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே அமிர்தா சைதன்யா தலைமறைவானார். அவரது ஆஸ்ரமத்தை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நேற்று சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி சாமியார் சைதன்யா கைது....
இது என்னா நமக்கு புதுசா..... எத்தன சமியார்ந்கல நாம பாத்தாச்சு.......
நம்ம மக்களும் இந்த ஜென்மத்தில திருந்த போராடு இல்ல....இந்த சாமியார்ந்களும் நம்மள விடபோறது இல்ல.......
நம்மக்கு ஒரு பலான சீடீ கேடக்கறது அவ்வளவஉ சுலபம் இல்ல.....ஆனா இவனுங்க கிட்ட மட்டும் எப்படி வண்டி வண்டியா பலான சீடீ கெடைக்குது....... யாராவது லிங்க் கொடுங்கப்பா .....:))
ஜெய்ப்பூரில குண்டு
சீனா பூகம்பம் பத்தி ஒரு பதிவு போட்டஉடனே இங்க ஜெய்ப்பூரில குண்டு வச்சு கிட்ட தட்ட என்பது பேருக்கு மேல உயிர் போய்டுச்சு.......என்ன கொடும சார் இது......
ஜெய்ப்பூரின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 150க்கும் அதிகமானோரில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்றிரவு 7.20 மணியளவில் ஜோஹாரி பஜார் பகுதியில் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து ஹனுமன் மந்திர், கோட்வாலி, திரிபோலியா பஜார், ஜோஹரி பஜார் உட்பட 6 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் ஜெய்ப்பூர் நகரமே குலுங்கியது.
குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு வங்கதேசத்தில் இயங்கும் ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹுஜி) என்ற தீவிரவாத அமைப்பே முக்கிய காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்பதாக ராஜஸ்தான் மாநில டி.ஜி.பி. ஏ.எஸ்.கில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ஒருவரை ராஜஸ்தான் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் இப்படியொரு தாக்குதல் நடைபெறும் என்பதை மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீசார் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தையும், இடங்களையும் தேர்ந்தெடுத்து தீவிரவாதிகள் குண்டுகளை வைத்ததால், பலியானோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்து உள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.