Showing posts with label அசின். Show all posts
Showing posts with label அசின். Show all posts

Thursday, June 12, 2008

'தசாவதாரம்' - 'குட்பை'?



தசாவதாரத்துடன் தமிழுக்கு அசின் 'குட்பை'?


நடிகர் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள 'தசாவதாரம்' வரும் (ஜூன்) 13-ம் தேதி வெளியாகவிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இதில் நடித்துள்ள அசின், இந்தப் படத்துடன் கோலிவுட்டிற்கு 'டாட்டா' காட்டி விட்டு பாலிவுட்டில் அழுத்தமாக கால்பதிக்க உள்ளார் என்ற செய்தி தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் வருத்தமளிக்கும்.

அசின் பின்னணி: மலையாளப் படத்தில் அசின் அறிமுகமானாலும், வந்தாரை வாழ வைக்கும் தமிழ்த் திரையுலகம் அவரையும் அரவணைத்துக் கொண்டது.

தமிழில் இவர் நடித்த முதல் படம் 'உள்ளம் கேட்குமே' என்றாலும், முதலில் வெளியானது, 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படமே. இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடியாக அசின் நடித்ததே தமிழில் பிரபலம் அடைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த `கஜினி'-யால் அசினுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. கஜினியில் கல்பனா கேரக்டரில் நடித்த... மன்னித்துக் கொள்ளுங்கள்... வாழ்ந்த அசினை பெண்கள் தங்கள்வீட்டுப் பெண்ணைப் போன்றே பார்த்து வந்தார்கள்.

தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் விஜயுடன் இணைந்து அசின் நடித்த 'போக்கிரி' படமும் ஹிட்டாகிவிடவே, பாலிவுட் உலகம் அவரை இருகரம் நீட்டி வரவேற்றது.

பாலிவுட்டில் அறிமுகம்: 'கஜினி' படத்தை தமிழில் இயக்கிய முருகதாஸ், அதே பெயரில் அதனை ஹிந்தியிலும் இயக்கி வருகிறார். இதில் அமீர்கானுக்கு ஜோடியாக அசின் நடித்துள்ளார். இது அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை வழங்கும் என பாலிவுட் வட்டாரங்கள் இப்போதே தம்பட்டம் அடிக்கத் தொடங்கி விட்டன.


ஹிந்தியில் அசின் நடிக்கும் முதல் படம் இது என்றாலும், சில முன்னணி விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் மக்களுக்கு அவர் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், பாலிவுட் ஹீரோயின்கள் அசினைப் பார்த்து, சற்றே கலக்கத்தில் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

இதனிடையே 'தசாவதாரம்' படத்தில் கமலுடன் இணைந்து படம் முழுவதும் அசின் கலக்கி உள்ளாராம்.

இது இப்படி இருக்க தமிழ் பட புரொடியூசர்கள் அசின் வீட்டுக் கதவைத் தட்டினால், "மேடம் ஷூட்டிங்கில் இருக்காங்க... ரொம்ப பிஸி" என்றே பதில் வருகிறது. டைரக்டர்கள் நேரில் அல்லது போனில் கதையை தெரிவித்தாலும், ஹீரோயினுக்கு முன்னுரிமை தரும் கதையாக இருந்தால் கூறுங்கள்... பார்க்கலாம் என நாசூக்காக நழுவி விடுகிறாராம் அசின்.

ஆக மொத்தம் அம்மணி தமிழ்ப் பட உலகை புறக்கணிக்க தைரியமாக முடிவெடுத்து விட்டார் என செய்திகள் உலவினாலும், நடிகைகளுக்கே உரித்தான பாணியில் அசினும் அந்த தகவலை மறுத்துள்ளார்.

தமிழ் எனக்கு தாய் வீடு மாதிரி... அதை புறக்கணிக்க முடியுமா என முன்னணி தமிழ் சினிமா நாளிதழுக்கு முத்தாய்ப்பாக அசின் பேட்டி அளித்திருந்தாலும், அவர் தமிழுக்கு குட்பை சொல்லப் போவது உறுதி என்பதற்கு 2 முக்கிய உதாரணங்கள் கிடைத்துள்ளன.

இதில் முதலாவது, விரைவில் மும்பையில் உள்ள லோக்கண்ட்வாலா வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தனது ஜாகையை அசின் மாற்ற உள்ளாராம். 2-வதாக 'லண்டன் டிரீம்ஸ்' என்ற ஹிந்திப் படத்தில் நடிக்க அசின் ஒப்பந்தமாகியுள்ளார். பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாகவும் நடிக்க அசினிடம் பேசப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இப்போது புரிந்திருக்குமே தலைப்பின் முழு அர்த்தம்....