Showing posts with label நம்ம நமீதா. Show all posts
Showing posts with label நம்ம நமீதா. Show all posts

Thursday, June 12, 2008

மாதர் குலங்களே!இத கொஞ்சம் யோசிங்க!


எதுவுமே நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கனும் . காரம் மணம் சுவை எல்லாமே. உடம்பிலே ஒருத்தனுக்கு கொஞ்சம் சதை கம்மியா இருந்திட்டா போதும், என்னடா ஓட்டடை குச்சி மாதிரி இருக்கே ம்பாங்க.சரின்னு கொஞ்சம் சதைப்பற்றோட இருந்தா என்ன மாப்ளே எந்த கடையிலே அரிசி வாங்குறவுக ன்னு நக்கல் வுட்டு கலாய்ப்பாங்க. என்னதான் பண்ணறது ? நம்ம சினிமாவிலே எடுத்துகிட்டா ஹீரோயின்க எல்லாமே நாட்டுப்பற்றோட இருக்காங்களோ இல்லையோ சதைப்பற்றோட இருக்கனும் அப்படீங்கறதிலே நம்ம மக்கள் தெளிவா இருக்காங்க.இதிலே அந்த கால சாவித்திரில இருந்து சென்ற கால குஷ்பு மற்றும் நிகழ்கால நடமாடும் குத்துவிளக்கு நமீதா வரை சொல்லிகிட்டே போகலாம். இதிலே மேட்டரே நம்ம தானைய தலைவி நமீதாதாங்க. என்ன பண்றதுங்க. நம்ம தமிழ் சினிமாஎல்லாருக்கும் நல்லா வயிறார சோறு போடுது ஆனா நம்ம ஹீரோயினகளுக்கு மட்டும் வயித்தை மறைக்க ஒரு நல்ல dress போடவிடமாட்டீங்குது. இதிலே நம்ம நமீதா என்ன பண்ணுவாங்க ? அவங்களே ஏதோ கெடச்ச ஒரு மீட்டர் துணிய கஷ்டப்பட்டு சுத்திகிட்டு தன்னோட தெறமையால நடிக்கவும் செய்யுறாங்க. இது நம்ம நாட்டுல இருக்குற சில மாதர் அம்மணிகளுக்கு புடிக்கலைங்களாம். என்ன கொடுமைங்க இது? நமீதா இப்படிப்பட்ட உடைஉடுத்தி மாதர்களை இழிவு படுத்தறதா சொல்லி போராட்டம் நடத்தப்போறதா அறிக்கை வேற. என்னாங்க இது யாருங்க உங்களை அவமானப் படுத்தினா ?இந்த டீவியிலே பாருங்க எப்போ பார்த்தாலும் சிகப்பழகு க்ரீம் விளம்பரம்தான். பொண்ணுங்க கலரா இல்லாட்டி வேலை கெடக்க மாட்டிங்குது ! கலரா இல்லாட்டி புருஷன் கெடைக்க மாட்டேங்குது ! ன்னு இந்த க்ரீம்காரங்க டுபுக்கு விட்டு விளம்பரம் பண்ணராங்க,.அதைப் பார்த்து நம்ம ஊரு அம்மணிக எல்லாருமே கிலோ கணக்குல க்ரீம் வாங்கி ஏதோ இப்போவே ஏஞ்ஜலீனா ஜோலியோட தங்கச்சி ஆகப்போற ரேஞ்சுக்கு பயபக்தியோட முகத்திலே தடவிகிட்டு இருக்காங்க !! என்ன கொடுமைங்க இது ? ஏங்க இவங்க விக்கறதே சிகப்பழகு கீர்ம்னு சொல்லித்தான். சிவப்பா மொளகாப்பழம்தான் இருக்கும் அந்தக் கலரில் ஒரு முகம் இருந்தா எப்படி இருக்கும் ரோசணை பண்ணுங்க அம்மணிகளா! ஏதோ கதக்களி டான்ஸ் ஆட மேக்கப் போட்ட மாதிரி இருக்காது ?ஆமா பொண்ணுங்க கருப்பா இருந்தா என்னாங்க? வேலை கெடைக்காதா ? இல்லை யாரும் கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்களா ? என்ன பேத்தல் இது. கல்யாணம் பண்ணப்போறப்போ பொண்ணு கலரா இருக்கணும்தானே தேடுறாங்கன்னு ஆனா அது வெள்ளைக்கலராதான் இருக்கணும்னு நீங்க ஏங்க முடிவு பண்ணுறீங்க? இதிலே Fairness மீட்டர்ன்னு வேற கொடுக்கறானுங்க. அழகை மீட்டர் வச்சு அளக்க முடியுமா கண்ணுகளா? யோசிங்கப்பூ. அந்த மீட்டர் எல்லாம் பாக்குறவுக கண்ணுலதான் இருக்குங்கரது தாழ்மையான கருதுங்க.பொண்ணு கருப்பா களையா இருக்குண்னு சொல்லிட்டு போங்களேன்.அதுனால மாதர் குலங்களே! உங்களை இழிவு படுத்துரது எங்கள் தானைய தலைவி நமீதா இல்லீங்கோ. இந்த மாதிரி அழகு கீரீம் விக்கிறவுக தானுங்கோ. உங்க போரட்டத்தை அங்கன போய் வெடிங்க கொளுத்துங்க. பாவம் ஏதோ பஞ்சாப்ல இருந்து பஞ்சம் பொழைக்க இங்க வந்து நடிச்சிகிட்டு இருக்குற அப்பாவி மேல ஏம்மா பாயுறீங்க ??

Friday, May 16, 2008

கொடும தாங்கலடா சாமீ............


நடிகை நமீதா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர பங்களாவில், வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அந்த வீட்டில் நமீதாவும் , வேலைக்காரர்களும் மட்டுமே வசித்து வருகிறார்கள். அந்த வீட்டில் நமீதாவும், வேலைக்காரர்களும் மட்டுமே வசித்து வருகிறார்கள்.

நமீதாவின் தாய்-தந்தை மற்றும் உறவினர்கள் , சொந்த ஊரான குஜராத்தில் வசிக்கிறார்கள். நமீதாவின் தாய் - தந்தை மற்றும் உறவினர்கள், சொந்த ஊரான குஜராத்தில் வசிக்கிறார்கள். நமீதா தனது பாதுகாப்புக்காக , ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். நமீதா தனது பாதுகாப்புக்காக, ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். இவை தவிர , வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார். இவை தவிர, வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்.
நமீதா , காலையில் படப்பிடிப்புக்கு சென்றால் , மாலையில்தான் வீடு திரும்புவார். நமீதா, காலையில் படப்பிடிப்புக்கு சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவார். அவர் இப்போது , ` இந்திர விழா ' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது, `இந்திர விழா 'என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து , இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா , படுக்கை அறையில் உள்ள ` ஏர்கன்டிஷன் ' மிஷினை ` ஆன் ' செய்தார். சீராக ஓடிக்கொண்டிருந்த ` ஏர்கன்டிஷன் ' மிஷினில் , திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. அந்த படப்பிடிப்பு முடிந்து, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா, படுக்கை அறையில் உள்ள `ஏர்கன்டிஷன் 'மிஷினை` ஆன்' செய்தார். சீராக ஓடிக்கொண்டிருந்த `ஏர்கன்டிஷன் 'மிஷினில், திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. படுக்கை அறை முழுவதும் ஒரே புகையாக இருந்தது. நமீதா , `` தீ...தீ... '' என்று அலற ஆரம்பித்தார். படுக்கை அறை முழுவதும் ஒரே புகையாக இருந்தது. நமீதா, `` தீ ... தீ ...''என்று அலற ஆரம்பித்தார். வேலைக்காரர்கள் ஓடிவந்து , மின்சார இணைப்பை முதலில் துண்டித்தார்கள். வேலைக்காரர்கள் ஓடிவந்து, மின்சார இணைப்பை முதலில் துண்டித்தார்கள். பின்னர் ஏர்கன்டிஷன் மிஷின் மீது தண்ணீரை கொட்டி , தீயை அணைத்தார்கள். பின்னர் ஏர்கன்டிஷன் மிஷின் மீது தண்ணீரை கொட்டி, தீயை அணைத்தார்கள். அதிர்ஷ்டவசமாக , ஒரு பெரும் தீ விபத்தில் இருந்து நமீதா தப்பினார். ` ஏர்கன்டிஷன் ' இல்லாததால் , நமீதாவினால் தூங்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, ஒரு பெரும் தீ விபத்தில் இருந்து நமீதா தப்பினார். "ஏர்கன்டிஷன் 'இல்லாததால், நமீதாவினால் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டதாக அவர் கூறினார். இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டதாக அவர் கூறினார்.
அவருக்கு தூங்க முடிஞ்சுச்சோ இல்லையோ! அவருக்கு தூங்க முடிஞ்சுச்சோ இல்லையோ! நமீதா ரசிகர்களுக்கு தூக்கம் வந்திருக்காது! நமீதா ரசிகர்களுக்கு தூக்கம் வந்திருக்காது! பத்திக்கிச்சு....பத்திக்கிச்சுடா.... பத்திக்கிச்சு .... பத்திக்கிச்சுடா ....