Showing posts with label மொக்க. Show all posts
Showing posts with label மொக்க. Show all posts

Tuesday, June 17, 2008

ஷில்பாவைக் கடித்த நாய்!



ஷில்பாவைக் கடித்த நாய்!

திருப்பதியில் தோழி வீட்டுக்கு வந்த இடத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியை தோழி வீட்டு நாய் கடித்து விட்டதாம்.கடந்த சில நாட்களாகவே தொடர் துன்பத்தில் உழன்று வருகிறார் ஷில்பா. சமீபத்தில் துபாய் சென்றிருந்தார் ஷில்பா. அங்கு அவருக்கு கடும் சளி, இருமல், நெஞ்செரிச்சல் வந்து படாதபாடுபட்டுள்ளார்.அது போதாதென்று அதற்கு முன்பு ஒரு நாயிடம் சிக்கி மீண்டுள்ளாராம் ஷில்பா.

இதுகுறித்து அவர் கூறுகையில், துபாயில் நான் இருந்தபோது கடும் சளி, நெஞ்செரிச்சல், இருமலால் பெரும் அவதிப்பட்டேன். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் பெரும்பாடு பட்டு விட்டேன்.அதற்கு முன்பு திருப்பதியில் உள்ள எனது தோழி வீட்டில் தங்கியிருந்த போது அவரது வீட்டு நாய் என்னைக் கடித்து விட்டது. நல்ல வேளையாக அது வீட்டு நாய் என்பதால் பிரச்சனை இல்லை.

'ரேபிஸ் எதிர்ப்பு ஊசி' எதையும் போட்டுக்கொள்ள வேண்டாம் என டாக்டர் என்னை அறிவுறுத்தினார். அதற்குப் பதிலாக 'ஆன்டி பயாட்டிக்' மருந்துகளை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.நாய்க்கடி ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. அதனுடைய விரல் நகங்கள், எனது ஒரு காலைப் பதம் பார்த்து விட்டது. இதனால் அந்த இடம் வீங்கி விட்டது.அது யாரையும் கடித்ததில்லையாம். ஆனால் அதன் உடம்பில் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறால் இப்படி செய்து விட்டதாக கூறினர்.நாய்க்கடிக்கும், சளிக்கும் தனித்தனியாக இரு 'ஆன்டி பயாட்டிக்' மருந்துகளை நான் தற்போது எடுத்து வருகிறேன்.

இந்த மருந்துகள் மிகவும் வலிமையானவை என்பதால் வயிற்றில் வலியை ஏற்படுத்தி விட்டது. இதனால் நான் மிகவும் சோர்வடைந்துள்ளேன்.இதன் காரணமாக மீண்டும் துபாய் சென்றுவிட்டு புதன்கிழமை ஊர் திரும்பியபோது விமான நிலையத்திலிருந்து என்னால் கார் வரைக்கும் நடந்து கூட வர முடியவில்லை. இதையடுத்து வீல்சேரில் என்னை அழைத்து வந்தனர். வீல் சேரில் அழைத்து வந்தது என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டது.இந்த சூழ்நிலை காரணமாக துபாயில் எனது பிறந்த நாளைக் கூட நான் கொண்டாட முடியவில்லை.

என்னையே எனக்கு வெறுத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் ஷில்பா.ஷில்பான் துன்பம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு சந்தோஷ செய்தியைப் பார்ப்போம். சமீபத்தில் மும்பை, அந்தேரியில், தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக புதிய அலுவலகத்தை வாங்கியுள்ளார் ஷில்பா.இந்த அலுவலக வளாகம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைக் கொண்டதாம். ஷில்பா, அவரது தாயார் சுனந்தா, இன்டீரியர் டிசைனர் பிரிதீஷ் ஆகியோர் இணைந்து 'இன்டீரியர் டெக்கரேஷனை' வடிவமைத்துள்ளனராம்.

இந்த அலுவலக வளாகம் 2 பெட்ரூம் கொண்ட வீடு. அதை வாங்கி அலுவலகமாக மாற்றியுள்ளனர். ஷில்பாவுக்கு பிள்ளையார் என்றால் ரொம்ப இஷ்டம். எனவே அலுவலகம் முழுவதும் விநாயகர் படங்களையும், குட்டி குட்டி சிலைகளையும் வாங்கி நிறைத்து விட்டாராம்.தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வருடத்திற்கு இரு படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஷில்பா.