Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, July 24, 2008

சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு


சபாநாயகர் பதவியில் சோம்நாத் சாட்டர்ஜி நீடிப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.கட்சியின் உத்தரவை ஏற்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால், சோம்நாத் சாட்டர்ஜியை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கருத்து தெரிவிக்கையில்,சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது அசாதாரணமானது. இருப்பினும் இதனால் அவர் சபாநாயகர் பதவியில் நீடிப்பதில்எந்தவிப் பிரச்சினையும் இல்லை.சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அந்த எம்.பி. எந்தக் கட்சியையும் சாராதவராகி விடுகிறார். சோம்நாத்தைப் பொறுத்தவரை, அவர் எந்தக் கட்சியையும் சேராதவராக இருக்கும் வரையில், தாராளமாக சபாநாயகர் பொறுப்ப அவர் வகிக்கலாம்.தற்போதைய சபாநாயகரே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. பாராளுமன்ற மரபுப்படி, சபாநாயகர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள நடவடிக்கை வரலாறு காணாதது. இருப்பினும் இது உள்கட்சி விவகாரம். இதில் காங்கிரஸ் தலையிட முடியாது.சபாநாயகர் பதவியில் சோம்நாத் சாட்டர்ஜி சிறப்பாக செயல்படுகிறார். நல்ல சபாநாயகராக இருக்கிறார். நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கிறார்.சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகர் பொறுப்பில் நீடித்து வருவதால், புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான அவசியமே இல்லை என்றார் ஜெயந்தி நடராஜன்.

Wednesday, July 23, 2008

பாஜகவின் மொள்ளமாரித்தனம்!!!!

பாஜகவின் மொள்ளமாரித்தனம் - பப்புவிடம் பாஜக ரூ. 7 கோடி பேரம்
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி பாஜக மக்களவைத் துணைத் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா என்னை திகார் சிறையில் வந்து சந்தித்தார் என லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி பப்பு யாதவ் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஒருவரை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பப்பு.இந் நிலையில் மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மல்ஹோத்ரா பேசுகையில், ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் எம்.பிக்களை கூட காங்கிரஸ் கூட்டணி விட்டு வைக்கவில்லை என்றார்.அப்போது எழுந்த பப்பு, என்னை இதே மல்ஹோத்ரா சிறையில் வந்து சந்தித்து மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்றார்.ஆனால், அதை மல்ஹோத்ரா மறுத்தார். நான் பப்பு யாதவை ஒரு போதும் சந்திக்கவில்லை என்றார்.பின்னர் பப்பு மக்களவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில்,பிகார் மாநிலம் மாதேபுரா தொகுதியில் இருந்து 5 முறை வெற்றி பெற்று இருக்கிறேன். என் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்று பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிக்கு சவால் விடுக்கிறேன். அடுத்தவர் மீது வசைபாடுவதை முதலில் அவர்கள் நிறுத்த வேண்டும் என்றார்.ராஷ்ட்ரீரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,எங்கள் கட்சி எம்.பி பப்பு யாதவுக்கு பாஜக பணம் கொடுக்க முன் வந்துள்ளது. திகார் சிறையில் அவரை சந்தித்து ரூ.7 கோடி தருவதாக பாஜக தலைவர் கூறியுள்ளார்.இந்த விவரம் வெளியில் வந்தவுடன் அதை மறைக்க மக்களவையில் 1 கோடி ரூபாயைக் கொட்டி பாஜக நாடகம் நடத்தி தப்பிக்க முயல்கிறது என்றார்.

மன்மோகன் அரசு

13 எம்.பிக்கள் 'கட்சி மாறி' வாக்களித்ததால் தப்பிய மன்மோகன் அரசு
டெல்லி: பல்வேறு கட்சிகளின் 13 எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் அணி மாறி வாக்களித்ததால், மன்மோகன் சிங் அரசு தப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.நேற்று லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுக்களும், எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. முதலில் 272 வாக்குகள் கிடைக்கும் என காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால் கூடுதலாக 3 எம்.பிக்கள் கிடைத்துள்ளனர். எதிர்த் தரப்பை விட கூடுதலாக 19 வாக்குகள் கிடைத்து வெற்றியும் கிடைத்துள்ளது.அரசுக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகளில் 13 பேர் எதிர் அணிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களால்தான் அரசு வெல்ல முடிந்தது. தங்களது கட்சி கொறடா உத்தரவை மீறி இவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.கட்சி மாறி ஓட்டுப் போட்டவர்களில் அதிக எண்ணிக்கையுடன் முதலிடத்தில் இருப்பது பாஜக. இது அந்தக் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த 7 பேர் கட்சி மாறி ஓட்டுப் போட்டுள்ளனர்.தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாளம் ஆகிய கட்சிகளிலிருந்து தலா 2 பேரும், பிஜூ ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து தலா ஒருவரும் மாறி வாக்களித்துள்ளனர்.இவர்கள் தவிர மதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செஞ்சிராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.இது போதாதென்று 9 எம்.பிக்கள் நடுநிலை வகித்துள்ளனர். அவர்களில் 4 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தத்தில், பாஜகவின் புண்ணியத்தால் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.