Wednesday, May 14, 2008

போலி சாமியார்


கேரளா: போலி சாமியார் சைதன்யா கைது

கேரள போலீசாரால் தேடப்பட்டு வந்த போலி சாமியார் அமிர்தா சைதன்யா இன்று காலை எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எர்ணாகுளத்தில் சாமியார் அமிர்தா சைதன்யா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து, பதுங்கி இருந்த சைதன்யாவை கைது செய்தனர்.

தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யபட்டுள்ள அமிர்தா சைதன்யா துபாயில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர் என்பதும், சர்வதேச போலீஸாரால் (இன்டர்போல்) தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

எர்ணாகுளத்தில் 'சாந்தி தீரம்' என்ற பெயரில் ஆஸ்ரமம் நடத்தி வந்த அமிர்தா சைதன்யா எனப்படும் சந்தோஷ் மாதவன் மீது, ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

துபாயில் வசிக்கும் சாரா எட்வின் என்ற பெண் அளித்த புகாரின் பேரில் சைதன்யாவின் ஆசிரமத்தில் கேரள போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் புலித்தோல், வெளிநாட்டு மதுவகைகள், ஆபாச சிடி-க்கள் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே அமிர்தா சைதன்யா தலைமறைவானார். அவரது ஆஸ்ரமத்தை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நேற்று சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


போலி சாமியார் சைதன்யா கைது....
இது என்னா நமக்கு புதுசா..... எத்தன சமியார்ந்கல நாம பாத்தாச்சு.......
நம்ம மக்களும் இந்த ஜென்மத்தில திருந்த போராடு இல்ல....இந்த சாமியார்ந்களும் நம்மள விடபோறது இல்ல.......
நம்மக்கு ஒரு பலான சீடீ கேடக்கறது அவ்வளவஉ சுலபம் இல்ல.....ஆனா இவனுங்க கிட்ட மட்டும் எப்படி வண்டி வண்டியா பலான சீடீ கெடைக்குது....... யாராவது லிங்க் கொடுங்கப்பா .....:))

ஜெய்ப்பூரில குண்டு

சீனா பூகம்பம் பத்தி ஒரு பதிவு போட்டஉடனே இங்க ஜெய்ப்பூரில குண்டு வச்சு கிட்ட தட்ட என்பது பேருக்கு மேல உயிர் போய்டுச்சு.......என்ன கொடும சார் இது......


ஜெய்ப்பூரின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 150க்கும் அதிகமானோரில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்றிரவு 7.20 மணியளவில் ஜோஹாரி பஜார் பகுதியில் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து ஹனுமன் மந்திர், கோட்வாலி, திரிபோலியா பஜார், ஜோஹரி பஜார் உட்பட 6 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் ஜெய்ப்பூர் நகரமே குலுங்கியது.

குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு வங்கதேசத்தில் இயங்கும் ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹுஜி) என்ற தீவிரவாத அமைப்பே முக்கிய காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்பதாக ராஜஸ்தான் மாநில டி.ஜி.பி. ஏ.எஸ்.கில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ஒருவரை ராஜஸ்தான் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெய்ப்பூரில் இப்படியொரு தாக்குதல் நடைபெறும் என்பதை மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீசார் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தையும், இடங்களையும் தேர்ந்தெடுத்து தீவிரவாதிகள் குண்டுகளை வைத்ததால், பலியானோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்து உள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 13, 2008

ஊழல்,ஊழல்,ஊழல்...........

நம்ம நாட்டுல ஊழ்ல்ன்ர ஒரு பிரண்டு சர்வ சுதந்திரமா திரியுறான் .....நாம எப்பவாவது ஊழல் பண்ணினவனோட கைதுக்கு பின்,அந்த வழக்கு என்ன ஆச்சுனு யோசிசுருகொமா????

கீழ (மேல ) படிங்க

இந்தியர்கள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஊழல் வழக்கு உண்டென்றால் அது போபர்ஸ் பீரங்கி ஊழலதான்..இது நடந்த போது(1987) இப்போது இருக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் பிறக்கவே இல்லை..

இந்த வழக்கினால் காங்கிரஸ் கட்சி 1989ல் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது..ஆனால் அந்த ஊழல் வழக்கு மட்டும் இன்னும் நடந்துட்டு இருக்கு .கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் எதுவும் முடிவுக்கு வந்தபாடில்லை..போபர்ஸ் போல நிறைய ஊழல் வழக்குகள் நம் அன்றாட வாழ்க்கையில் வந்து போயிருக்கின்றன. இதுபோல பரபரப்பாகப் பேசப்பட்டு நம்மால் மறக்கப்பட்ட ஊழல்கள் குறித்தும், அந்த ஊழல்கள் சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தண்டனை பெற்றவர்கள் குறித்தும் இந்தப்பதிவில் சில விசயங்கள் எழுத எண்ணம்.

1. போபர்ஸ் ஊழல்- 64 கோடி

வழக்கு பதிவு செய்யப்பட்ட தேதி-22-01-1990குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- 22-10-1990

தண்டனை பெற்றவர்கள்--- தேடுராங்க,தேடுராங்க....தேடிட்டே இருக்காங்க.

கைப்பற்றப் பட்ட பணம்- கானாமபோசு

2.HDW Submarine- 32.55 கோடி

வழக்கு பத்திவு செய்யப்பட்ட தேதி-05-03-1990

தண்டனை பெற்றவர்கள்--- தேடித்தேடி சலிச்சுபோய் ஒன்னும் பண்ண முடியாம சி.பி.ஐ வழக்கை மூடிச்சுக்கறோம் அனுமதி கொடுங்கனு நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள்.

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

3. பங்குச்சந்தை ஊழல்- 4100 கோடி

வழக்கு பதிவு செய்யப்பட்ட தேதி - 72 வழக்கு.(1992 - 1997 வரை)

குற்றம் சாட்டப்பட்டவர்கள்--- 4 பேர்(ஹர்சத் மேத்தா உட்பட)

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
4. ஏர்பஸ்(Airbus) ஊழல்- 120 கோடி

வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி- 23-03-1990

குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை தண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

5.இந்தியன் வங்கி ஊழல்- 762.92 கோடி

வழக்குப் பதிவு- 45 (1992ல் இருந்து)குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 27 நபர்கள் மீது

தண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

6.ஹவுஸிங் ஊழல்- 65 கோடி

வழக்குப் பதிவு- 11/03/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - தண்டனை பெற்றவர்கள்-- நான்கு இளநிலை ஊழியர்கள் மட்டும் கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

7.கால்நடைத் தீவன ஊழல்- 950 கோடி

வழக்குப் பதிவு- மார்ச் 1995லிருந்து (64 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -63

தண்டனை பெற்றவர்கள்-- ஒரே வழக்கில் மூன்று அதிகாரிகள் மட்டும்

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

8.பெட்ரோல் பங்க் ஊழல்- 950கோடி

வழக்குப் பதிவு- நவம்பர் 1996 -1997 (15 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை

தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

9.யூரியா ஊழல்- 133 கோடி

வழக்குப் பதிவு- 28/05/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 26/12/1997

தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

10.சி.ஆர்.பி(CRB) ஊழல்- 1031 கோடி

வழக்குப் பதிவு- 20/05/1997

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 02/09/1997

தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

11.டெலிகாம் ஊழல்- 1200கோடி

வழக்குப் பதிவு- ஆகஸ்ட் 1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 4

தண்டனை பெற்றவர்கள்-- ஒருவர் மட்டும்

கைப்பற்றப் பட்ட பணம்- 5.36 கோடி

12.யுடிஐ(UTI) ஊழல்- 9500கோடி

வழக்குப் பதிவு- ஜூலை 2001(1 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 2004 வரை

தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

13.கே.பி ஊழல்(KAY PEE)- 3128கோடி

வழக்குப் பதிவு- மார்ச்&மே 2001(மூன்று வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இரண்டு

தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

14.வீடு விற்பனை (Home Trade) ஊழல்- 1200கோடி

வழக்குப் பதிவு- 10/05/2002

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை

தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி

என்னோட ஒரே ஒரு கேள்வி என்ன என்றால் இந்திய மக்களாகிய நாம் ஊழல் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றே நினைக்கிறேன்?...அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி எதற்கு நம் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணாக்கவேண்டும்?

என்ன நான் சொல்றது ....

யாருபா அது கூடத்துல கல்லால அடிகறது....

சரி சரி வெண்ணெய் இந்த மாதிரி சமூக தொண்டு சயிரப்ப ஒன்னு ரெண்டு அடி விளுவதான்

அதை எல்லாம் பாக்காம நேர ல்ய்ன putichu poikitai இரு ------

பூகம்பம்

பூகம்பம் இவ்வளவு கோடூரமா ???????

சீனா எப்படி தாங்கிக்க போவுது !!!!!!

ஒரு ஊர்ல ஒரு ஸ்கூல் முழுவதும் அடியோட இடிஞ்சு விழுந்து நிறய குழந்தைகள் மண்ணோட போதஞ்சு போய்ச்சு.

கிட்ட தட்ட ஆய்ராமாவது இருக்கும்னு சொல்றாங்க...

இது எங்க போயி முடியும்னு தெரியல நண்பர்களே..

நம்ம ஊரு சுனாமி கூட இவ்வளவு கொடூரமா இருந்து பாக்கால .....

இந்த சுட்டிய சொடுக்கி பாருங்க .......

http://www.msnbc.msn.com/id/24578006/displaymode/1107/s/2/framenumber

முடிஞ்சாச்சு லீவு ..

நீங்க எல்லோரும் ஊருக்கு போய்விட்டு திரும்ப வரும் நாள் வந்து விட்டதா குழந்தைகள் எல்லாம் திரும்பவும் ஸ்கூல் போக அடம் பிடிக்கும் ....

எப்படி சமாளிக்கபோரோம்னு தெரியல..

எதாவது வழி இருந்தா சொலுங்களேன் மக்கா....
.

Friends

ஹாய் Blogers ரொம்ப நாளைக்கு பிறகு சந்திக்கிறோம்.
எல்லொரும் sovikiyama